Nenjame Nenjame
A.R. Rahman
6:51என்னை தர உன்னை விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா, இப்பயே வா நீ வந்த நிழல் தந்த எதனாலோ ஒத்துக்கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஹோ வருவேனே பின்னோடு ஓ-இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகை எல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பாணம் என் உசிர் வரை வேணும் உன் மூச்சு காத்தில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் என்னை தர உன்னை விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான், இப்பயே தான் உன் கூரைச்சேலை கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் ஓ தங்கத் தோடு பேசும் காதோரம் ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் ஓ மேளச் சத்தம் மெட்டிச் சத்தம் என் நெஞ்சு கொண்டாடும் ஓ-இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகை எல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பாணம் என் உசிர் வரை வேணும் உன் மூச்சு காத்தில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் ஒட்டுக் கேக்கும் காத்தே கொஞ்சம் எட்டிப் பார்ப்பாயோ ஒரு வெக்கம் தின்னு நிக்கும் என்னை தொட்டு போவாயோ என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இந்நாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் உன் அன்பு என்னும் பாணம் என் உசுர் வரை வேணும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே ஓ-இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகை எல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பாணம் என் உசிர் வரை வேணும் உன் மூச்சு காத்தில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும்