Theeyaga Thondri
C. Sathya
4:48செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா அழைத்தேன் உன்னை என்னோடு இருப்பேன் என்றும் உன்னோடு அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா மிதந்தேன் காற்றில் காற்றாக நடந்தேன் இரவில் நிழலாக கண்ணே உன் கண்கள் என்னை காணுமா ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ சின்ன சின்ன மலர் குவியலை போல் எனக்குள் மலர்ந்தாய் என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து கருவில் அசைந்தாய் உன்னைப் பெறும் அன்னை வலி வலியல்ல ஓர் வரமே என் மார்பிலே கூடுகட்டி நீ உறங்கிடும் நாள் வருமே பால் கசியும் இதழோடு உன்னைக் காணவே தெய்வம் கூட ஓசை இன்றி வந்து போகுமே செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே மழைபோல் வந்தாய் எந்த திசையிலும் இருட்டுக்குள் நான் வெளிச்சம் தந்தாய் ஜென்மம் ஒன்று போதாதென்று ஏழு ஜென்மம் நான் சுமப்பேன் என் வாழ்விலே ஒரே இன்பம் கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் உன் மேல் தூசும் தீண்டாமல் காப்பேன் அன்பே காலம் முழுதும் உனக்காக வாழ்வேன் அன்பே செங்காந்தலே ஆராரிரோ சின்ன தென்றலே ஆராரிரோ