Devapitha

Devapitha

Deva, K. S. Chithra, & C. Pandian

Альбом: Thotthiram Seyvom
Длительность: 4:25
Год: 2019
Скачать MP3

Текст песни

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்

ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்