Kaalamellam Kadhal

Kaalamellam Kadhal

Deva

Длительность: 5:05
Год: 1996
Скачать MP3

Текст песни

அஹ்ஹ் அஹ்ஹ்

காலமெல்லாம் காதல் வாழ்க
காதலேனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி
கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி
நீ காதலி நீ காதலி

ஹே ஹே ஹே ஹே

கண்ணும் கண்ணும் மோதுமம்மா
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும்
காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும்
காதல் ஒரு போதை

காதலுக்குப் பள்ளி இல்லையே
அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க

அஹ்ஹ் அஹ்ஹ்

ஹே ஹே ஹே ஹே

ஜாதி இல்லை பேதம் இல்லை
சீர்வரிசை தானம் இல்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்

ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன
காதல் ஒன்று சேரும்

நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது
காசு பணம் கேட்பதில்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க
காதலேனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி
கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி
நீ காதலி நீ காதலி