Sollamaley

Sollamaley

Dhilip Varman

Альбом: Uyirai Tholaithen
Длительность: 5:18
Год: 2011
Скачать MP3

Текст песни

அஹ்ஹ் அஹ்ஹ்ஹ

சொல்லாமலே கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே

உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்

தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை துளைத்தேன்

சொல்லாமலே கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே

இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே
எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை
என்னை அறியாமலே கால்கள் நடை போடுதே
வலி கூட இந்நேரம் சுகமாகுதே

உன் காலடியில் கிடப்பது மணலில்லை
என் மனம்தான்
என்னை தவிர உந்தன் சுவாசத்தை
யார் அறிவார்

தூரம் சென்றபின் இதயம் சொன்னது
இதுதான் காதலா

சொல்லாமலே கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே

நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே
முடிவல்லா நிலையென்று உன்னை பார்க்கிறேன்
விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி
இது என்ன மாயங்கள் புதிரானதே

என் வாழ்க்கையிலே
காதலை உணர்ந்தது உன்னிடம்தான்
என் உணர்வுக்கு நீ
நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா

தூரம் சென்றபின் இதயம் சொன்னது
இதுதான் காதலா

சொல்லாமலே கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே

உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்
தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை துளைத்தேன்