Vaazhga Vaazhgave

Vaazhga Vaazhgave

Haji Nagore E. M. Hanifa

Альбом: Madeenavil Oru Naal
Длительность: 6:43
Год: 1992
Скачать MP3

Текст песни

வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி
வாழ்க வாழ்கவே வாழ்கவே

ஆதி பிதா நபி ஆதம் ஹவ்வாவும்
அகிலத்தில் மகிழ்வாய் வாழ்ந்தது போலும்
நீதீ இப்ராஹீம் நபியுடன் சாரா
நேர்மை ஹாஜிரா வாழ்ந்தது போலும்
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி
வாழ்க வாழ்கவே வாழ்கவே

இறைவனை கண்ட மூஸா நபியுடன்
ஏந்திலாய் சபூரா வாழ்ந்தது போலும்
பொறுமை மிகுந்த அய்யூப் நபியுடன்
ஹுவை ரஹீமா வாழ்ந்தது போலும்
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே

கலைமிகும் அழகு யூசுப் நபியுடன்
கனிவுடன் சுலைஹா வாழ்ந்தது போலும்
உலகத்தை ஆண்ட சுலைமான் நபியுடன்
உன்னத பல்கீஸ் வாழ்ந்தது போலும்
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி
வாழ்க வாழ்கவே வாழ்கவே

இறைவன் தூதராய் சுடராய் வந்த
ஏந்தல் முஹம்மத் நபியுடன் வாழ்ந்த
நேரிமிகும் காதீஜா ஆயிஷா போலும்
நெஞ்சம் நினைந்து மகிழ்வுடன் நாளும்
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே

வீரம் நிறைந்த வேந்தர் அலியுடன்
வாஞ்சய் பாத்திமா வாழ்ந்தது போலும்
நேரிய குர்ஆன் நேரிமுறை தாங்கி
நிதமும் வாழ்ந்த வலிமார் போலும்
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நீடூழி
வாழ்க வாழ்கவே வாழ்கவே

நீண்ட ஆயுளும் நிரந்த செல்வமும்
நிதமும் பெற்றுத் நீடூழி வாழ்க
ஆண்டவன் அருளால் குழந்தைகள் ஈன்று
அரமாய் நபி வழி நன்கு நடந்த வாழ்க
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே

உற்றார் பெற்றோர் யாவரும் மகிழ
உவகை பொங்கிடும் நண்பர்கள் புகழ
வற்றாத துஆ செய்திடும் பெரியோர்
வாகாய் உள்ளம் மலர்ந்து திகழ
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வல்லவன் அருளால் நல்லறம் பேணி
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே
வளமாய் நலமாய் மனமக்கள் நூறாண்டு
வாழ்க வாழ்கவே வாழ்கவே(வாழ்கவே)