Maamalai Sabariyile
K. Veeramani
3:31INTRODUCTION ஓம் நமச்சிவாய. அன்பே சிவம். திருச்சிற்றம்பலம். அடியார்களே, வாழ்க்கையில் நாம் அனைவரும் இன்பமுடன் வாழவே விரும்புகிறோம். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கின்றது. அவ்வாறு இறைவன் நமக்கு அளித்த இந்த வாழ்வில் இன்பத்தை பெருக்கிக் கொள்ளவும் துன்பத்தை சுருக்கிக் கொள்ளவும் தக்க வழி கடவுள் வழிபாடே ஆகும். துன்பமில்லா மனிதர் எவரும் உண்டோ? ஆகவே துன்பத்தை சுருக்கிக் கொள்ள நாம் அனைவரும் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த கடவுள் வழிபாட்டிற்கு வழிகாட்டியவர்கள் பன்னிருதிருமுறை சான்றோர்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுதும் சோதனைகள் வரும். அந்த சோதனைகள் வரும் பொழுது மனதில் சந்தேகமின்றி எந்த விதமுமான சலனமும் இன்றி நம்பிக்கையுடனும் தேவார,திருவாசக, திருமுறைகளை பாராயணம் செய்தால் கட்டாயம் பலன் உண்டு. காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நந்நெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே அந்த வேத நாதனான நமச்சிவாயத்தை நாம் மனமுருகிப் பாடினால், இந்த பதிகங்களை தினந்தோறும் பாராயணம் செய்தால் எந்த விதமான துன்பமும், கஷ்டங்களும் நீங்கி நாம் அனைவரும் சுகம் பெறலாம் என்பது திண்ணமாகும். நோய் நொடியில்லாமல் மனநிம்மதியோடு நாம் எல்லாம் வாழ இறைவன் அளித்த இந்த வாழ்க்கையை நாம் நன்றாய் வாழ ஈசனை போற்றி மனமுருகி பாடுவோம். சித்தர்பாடல்கள், பலவகையான மருத்துவப் பாடல்கள், திருமூலர் திருமந்திரம், தேவார திருவாசகப் பதிகங்களையும் மிக முக்கியமான பிணி தீர்க்கும் பதிகங்களும், பலன் தரும் பதிகங்களும், எளிய முறையிலே, இசை வடிவிலே, அனைவரும் கேட்டுப் பயன் பெறும் வகையிலும், அனைவரும் கூட சேர்ந்து பாடும் வகையிலும், இதை பக்தியோடும், பரவசத்தோடும் அபிராமி ஒலிநாடா நிறுவனம் உங்களுக்காக அன்புடன் வெளியிடுகிறது. இதைக் கேட்டு பாராயணம் செய்து மனமுருகிப் பாடி நாம் எல்லோரும் ஈசனின் அருளுக்கு பாத்திரமாகுவோம். ஓம் நமச்சிவாயா. அன்பே சிவம். திருச்சிற்றம்பலம்