Karpoora Nayagiye

Karpoora Nayagiye

L R Eswari

Длительность: 3:21
Год: 1960
Скачать MP3

Текст песни

கற்பூர நாயகியே கனகவள்ளி

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா ஆ

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
அம்மா நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
அம்மா நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்

அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
கருமாரி அம்மா
கருமாரி அம்மா