Nenjam Orumurai

Nenjam Orumurai

Mahalakshmi Iyer & Srinivas

Длительность: 4:46
Год: 2003
Скачать MP3

Текст песни

நெஞ்சம் ஒருமுறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி  பாா் என்றது
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி  பாா் என்றது
ரெண்டு கரங்களும் சோ் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான்
எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த
முதல் வெளிச்சம்

நீதான் நீதான்
எந்தன் உயிா் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட
முதல் ஸ்பாிசம்

கன்னம் என்னும்
தீ அணைப்பு துறையில்
உன் முத்தம்தானே
பற்றி கொண்ட முதல் தீ

கிள்ளும்போது
எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே
நானும் தொட்ட முதல் பூ

உன் பாா்வைதானே
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்

அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை

காலம் உள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை

நெஞ்சம் ஒருமுறை நீ என்றது
கண்கள் மறுமுறை பாா் என்றது

காதல் என்றால் அது
பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது
தீயின் உருவம்

காதல் வந்தால்
இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்றில்
பாதம் பரவும்

காதல் வந்து
நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தட்பவெப்ப
மாற்றங்களும் நிகழும்

காதல் வந்து
கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றை
உள்ளுக்குள்ளே அனுப்பும்

இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்

காதல் என்ற வாா்த்தையிலே
ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம்

காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பாா் என்றது
ரெண்டு கரங்களும் சோ் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது

உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது