Kundrakudi
Mahanathi Shobana
4:20ஆஆ ஆஆ உப்புக் காத்து ஊதக் காத்து சுத்தும் கடல் கரைய பாத்து சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா வாட கத்து வீச பாத்து அலையை எடுத்து வலயப் போட்டு மீன் பிடிக்கும் தொழில் நடக்குது முத்தய்யா கரை மீண்டு வர காவல் உந்தன் வேலய்யா திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா வேல்முருகா தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா மால்மருகா திருவடியில் தவமிருப்போம் திருமுருகா திருமுருகா தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா வடிவழகா சமுத்திரம் போன மச்சான் சேமத்துடன் திரும்பி வர சமுத்திர சாமி உந்தன் சன்னதியில் வேண்டி நின்றேன் ஒத்தயில தவிக்க விட்டு பெத்த புள்ள உறவு விட்டு கடலுக்கு போன மச்சான் கரையேற ஏங்குகின்றேன் காத்து கொஞ்சம் பலமடைஞ்சா கட்டுமரம் ஆடுமய்யா ஏழை எங்க குடிசையெல்லாம் வெட்ட வெளியாகுமய்யா செந்தூரில் நீயிருக்க என்ன குறை நேருமய்யா கோவில் மணி கேட்டிருந்தா வாழ்வில்லில்லை துன்பமய்யா வலையில் வந்து விழுந்திடனும் மீனு விலை போனா பசிக்கு அது சோறு உப்புக் காத்து ஊதக் காத்து சுத்தும் கடல் கரைய பாத்து சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா வேல்முருகா தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா மால்மருகா திருவடியில் தவமிருப்போம் திருமுருகா திருமுருகா தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா வடிவழகா தென்னை ஒன்னு நட்டு வெச்சு தண்ணீர் தினம் நினைச்சோம் பின்னால பலன் தரும்னு அண்ணாந்து பாத்து நின்னோம் கண்ணீர தேக்கிவெச்சு உப்பளத்தில் பாச்சி வெச்சோம் உப்பாக வெளையுமுன்னு ஊர் பார்க்க எங்கி நின்னோம் தென்னையென கந்தன் உனை எண்ணத்துல வெச்சிப்புட்டோம் பக்தியெனும் நீரிறைச்சு வேர்பிடிக்கப் பாடுபட்டோம் உப்பளமாய் உன் தளத்தை உள்ளத்துல வெச்சிப்புட்டோம் கண்ணீர காலடியில் காணிக்கையா சேர்த்துபுட்டோம் மெழுகெனவே உருகுகிறோம் முருகா அழுகை வர பார்ப்பதுவும் அழகா உப்புக் காத்து ஊதக் காத்து சுத்தும் கடல் கரைய பாத்து சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா வேல்முருகா தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா மால்மருகா திருவடியில் தவமிருப்போம் திருமுருகா திருமுருகா தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா வடிவழகா சொத்து பத்து சேத்து வைக்க சித்தத்துல எடமுமில்ல பத்து ஒண்ணு போடாம பார்த்திடத் தான் வேண்டுகின்றேன் முத்துமணி ரத்தினமே மூனுவடம் தேவை இல்லை முப்பொழுதும் உன் தயவு இருந்திட விரும்புகிறேன் ஆழக்கடல் நீ கிடந்து அரசாள வந்தவனே அதுபோல என் மனசில் குடியேற வாருமய்யா சம்ஹார நேரத்தில சமுத்திரம் பின் வாங்கும் சந்தோஷ திருநாளில் நல்லருளை தாருமய்யா முருகனென்று முழங்குது என் மனசு கடலபோல உன் கருணை பெருசு உப்புக் காத்து ஊதக் காத்து சுத்தும் கடல் கரைய பாத்து சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா வேல்முருகா தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா மால்மருகா திருவடியில் தவமிருப்போம் திருமுருகா திருமுருகா தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா வடிவழகா வேல்முருகா வேல்முருகா