Poove Illaya Poove
Ilaiyaraaja
4:18ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறையை நீ விலக்கு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே மங்கலம் குலுங்கும் எங்கள் குங்குமத்து நாயகிக்கு மஞ்சள் நீர் எடுத்து வந்தோம் மணக்கும் புது மல்லிகப்பூ தொடுத்து வந்தோம் தங்கமே உன் பூ மணக்கும் அங்கமெல்லாம் பூசிடத்தான் சந்தனமும் கொழச்சு வந்தோம் தாயே உன் சன்னதியை தேடி வந்தோம் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறையை நீ விலக்கு மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா கை ஏந்தி கேட்டு நின்றேன் கண் கொண்டு பாருமம்மா ஆசை வைச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா ஆளை கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா உள்ளுக்குள்ளே தேனை வச்சு நெஞ்சுக்குள்ளே நஞ்சை வச்ச வஞ்சகத்தை தடுத்து விடு கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை அம்மா நீ மாற்றி விடு ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறையை நீ விலக்கு அம்மா உன் கண்ணை மறைச்சு அநியாயம் காணுதம்மா அலைபாயும் பிஞ்சு நெஞ்சம் இனி மேலும் தாங்காதம்மா கண்ணுக்கு இமையாய் இருக்கும் கண்மணி வாழணும் புரியாதா கண்ணீரில் மாலை கட்டிப் போட்டேன் உனக்கு தெரியாதா வெண்கல மணி அடிச்சு மங்கல ஒளி கொடுத்து தங்கமே வர வேண்டும் எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும் நம்பி வந்த பக்தனுக்கு துன்பம் என்றும் இல்லை என்று நம்பிக்கையை தர வேண்டும் தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறையை நீ விலக்கு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே ஆத்தா உன் கோவிலிலே(ஆத்தா உன் கோவிலிலே) அலங்கார வாசலிலே(அலங்கார வாசலிலே) ஏத்த வந்தோம் மாவிளக்கு(ஏத்த வந்தோம் மாவிளக்கு) எங்க குறையை நீ விலக்கு(எங்க குறையை நீ விலக்கு)