Thooliyile Aadavandha (From "Chinna Thambi") (Male)
Ilaiyaraaja
4:38ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே சாடல் எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம் வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம் ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால யார் அடிச்சா சொல்லி அழு நீர் அடிச்சா நீர் விலகும் காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா