Azhuthayum Pambayum
Biju Narayanan
4:20உதயங்கள் மாலைகள் திருநீறு பூசும் சபரிமலை கொண்ட திருச்சுடரே பதினெட்டு படிமீது குடிகொள்ளும் பொருளே பாத கமலங்களில் சரணம் உன் பாத கமலங்களில் சரணம் உதயங்கள் மாலைகள் திருநீறு பூசும் சபரிமலை கொண்ட திருச்சுடரே ஏழைக்கு தோழனாய் ஐம்பூத நாதனாய் பாருக்கும் விண்ணிற்கும் குருநாதனாய் ஏழைக்கு தோழனாய் ஐம்பூத நாதனாய் பாருக்கும் விண்ணிற்கும் குருநாதனாய் புலி மீதமர்ந்திடும் புண்ணியமா எந்தன் புலி மீதமர்ந்திடும் புண்ணியமா எந்தன் பந்தள பெருமானை காண்பேனோ மந்திர மணியோசை கேட்பேனோ உதயங்கள் மாலைகள் திருநீறு பூசும் சபரிமலை கொண்ட திருச்சுடரே ஆதிபரம் பொருளின் பூரண அவதாரம் ஊழிக்கும் உயிருக்கும் ஆதாரம் நீ ஆதிபரம் பொருளின் பூரண அவதாரம் ஊழிக்கும் உயிருக்கும் ஆதாரம் நீ காலங்கள் வகுத்திடும் காலடிகளை எந்தன் காலங்கள் வகுத்திடும் காலடிகளை எந்தன் கண்களில் போற்றி நான் வர வேண்டும் உந்தன் கற்பூர மழையில் என் இசை வேண்டும் உதயங்கள் மாலைகள் திருநீறு பூசும் சபரிமலை கொண்ட திருச்சுடரே பதினெட்டு படிமீது குடிகொள்ளும் பொருளே பாத கமலங்களில் சரணம் உன் பாத கமலங்களில் சரணம் உதயங்கள் மாலைகள் திருநீறு பூசும் சபரிமலை கொண்ட திருச்சுடரே