Bakyamthan Lakshmi Varumama

Bakyamthan Lakshmi Varumama

Nithya Sri

Длительность: 5:06
Год: 2012
Скачать MP3

Текст песни

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
முன்னோர்கள் செய்த
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையின் அழைக்க
மத்தொரு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

கனக விருஷமாய் கனமழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெருக
கனக விருஷமாய் கனமழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெருக
தினகரகோடி உன் மேனியில் உருக
ஜனக ராஜன் திருகண்மணி வருக

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் சேராய்
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் சேராய்
குங்கும பூவாய் பங்கய பாவாய்
வேங்கடரமணரின் பூங்கொடி வாராய்

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்
சக்திக்கேற்றபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அட்சதை சீதனம்

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து

அக்கறையோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா