Ninaippathellaam Nadanthu

Ninaippathellaam Nadanthu

P.B. Sreenivas

Альбом: Nenjil Or Aalayam
Длительность: 3:53
Год: 1962
Скачать MP3

Текст песни

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

இந்த ரெண்டு வரிகள் அனுபவம்
வாழ்க்கைக்கு தரும் பாடம்
இன்னைக்கும் நான் ரசிக்குறேன்
அதனாலே இந்த பாடலை  இப்பொழுது கேட்கலாம்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை