Germanien Senthan

Germanien Senthan

S. Janaki, S. P. Balasubrahmanyam

Длительность: 5:39
Год: 1979
Скачать MP3

Текст песни

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே

காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்

ஜெர்மனியின் செந்தேன் மலரே

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே

காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே

பூஞ்சோலையே பெண்ணானதோ
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ

பூங்கோதையின் நெஞ்சோடு நீ
இனி எந்நாளுமே கொண்டாடலாம்

லாலாலா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே

லலலலா வா வா
எனதன்பின் சுடர் நீயே

சுகம் நூறாக வேண்டும்
பா பா ப ப பா

உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே

காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்

பேரின்பமே என்றால் என்ன
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன

பேரின்பமே நீதானம்மா
அதை நீ என்னிடம் தந்தால் என்ன

பா ப வா வா வா
என்னை அணைத்தே கதை சொல்ல

லாலாலா வா வா
அதை சொல்வேன் சுவையாக

வெகு நாளாக ஆசை
ர பாபா ப பா

என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்கம்

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே

காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
பாபா ப பா பாபா ப பா