Thendral Vanthu Theendumbothu (From "Avatharam")

Thendral Vanthu Theendumbothu (From "Avatharam")

S. Janaki

Длительность: 5:19
Год: 1995
Скачать MP3

Текст песни

தந்த தாநதந்த தாநாதனனா
தாநத் தந்த தாநத் தந்த
தான தான தான தானனனா
தந்த தந்த தந்தத தந்த தந்த தந்தத தந்த
தந்த தத தாததானா நானனனா, தனனனா
தந்த தத தாததானா நானனனா, தனனனா

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓட நீரோட
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நெறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ? நெனப்புல