Chandiranai Kuppidunga

Chandiranai Kuppidunga

S. P. Balasubrahmanyam

Длительность: 5:33
Год: 1993
Скачать MP3

Текст песни

சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட

மறவன் கை பட்டுபுட்டா
மண்ணு கூட பொன்னாகும்
மன்னவனின் கால் பட்டா கார கூட பால் வார்க்கும்

பொன் மலரும் பூ மலரும் வாசலிலே
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே

சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட

தெற்கு ரத வீதியிலே
தென்ன மர தோப்புக்குள்ளே
தென்றல் வருது சேதி சொல்லுது
தேவன் இவன் காதுக்குள்ளே

ராஜ காளி அம்மனுள்ள சோலையூரு கோவிலிலே
சூடங் கொளுத்து ஜோதி தெரியும்
மன்னன் இவன் கண்ணுக்குள்ளே

கட்டிளங் காளை என கட்டு காவல்கள் மீறிக்கிட்டு
எட்டடி வேங்கை என திக்கு
எட்டுந்தான் சீறிக்கிட்டு

வருவான் சேதுபதி உண்மைக்கொரு நீதிபதி
ஊருசனங்க வாழ்த்த வேணுங்க
பொங்கும் இந்த ஜீவநதி

சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட

ஆ ஆரிரோ ஆரிரோ
ஆ அரிராரிராரோ
லுலுலுலு ஆரிராரி ரோ
லுலுலுலு ஆரிராரி ரோ
லுலுலாயி

கண்ணு ரெண்டும் வீச்சருவா
கிட்டத்துல யார் வருவா
குத்தம் புரிஞ்சா கொள்ளை அடிச்சா
ஒத்தையில மோதிருவான்

சூரக்காத்து வீசினாலும் சாஞ்சிடாத ஆல மரம்
சின்ன மருது பெரிய மருது
போல இவன் காத்து நிப்பான்

பாண்டியர் பூமியிலே வைகை
பாயிற நாள்வரைக்கும்
தென்னவர் சீமையிலே இந்த
மன்னவர் பேரிருக்கும்

பொதுவா எக்குலமும் தான்பிறந்த முக்குலமும்
போற்றிப் புகழ்ந்து
பாட்டுப்பாடிக்கும் பாளையத்துக்காரனடி

சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட

மறவன் கை பட்டுபுட்டா
மண்ணு கூட பொன்னாகும்
மன்னவனின் கால் பட்டா கார கூட பால் வார்க்கும்

பொன் மலரும் பூ மலரும் வாசலிலே
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே

சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட