Aaravalli

Aaravalli

Srikanth Deva

Длительность: 5:21
Год: 2010
Скачать MP3

Текст песни

அடி ஆரவள்ளி என் சூரவள்ளி

ஹே அஹ்ஹ்ஹ ஹே அஹ்ஹ்ஹ

ஆரவள்ளி சூரவள்ளி
ஆட்டிபடைக்கும் அம்சவள்ளி
என்ன தொவச்சி எடுக்க வந்த கள்ளி
ஒன்ன கண்டா துடிக்கிறேன்டி
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி
அடி நண்டா அலையுறேன்டி
நெசமா நல்லவள தேடுறேன்டி

ஏ கொறலிவித்த பேச்சிக்காரா(ஆஹ் ஆமா )
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா(ஹே ஹே )
கொடுக்கா பல்லு மூக்குக்காரா

சும்மா மல்லுகட்டி நிக்காதடா
என்ன மாங்காதின்ன வெக்காதடா(அய்யோ )
சப்புகொட்டி சொக்காதடா
என்ன தாலிகட்டி தூக்கிகோடா(வாடி வாடி )

ஆஆ அஹ்ஹ்ஹ ஹே அஹ்ஹ்ஹ ஹே

டமுக்கு டுமுக்கு

டமுக்கு டுமுக்கு டுமுக்கு டமுக்கு

ஒத்த மல்லி கொண்டையில
பூவா என்ன சுத்திக்கடி
கொழந்தையா அள்ளி என்ன
இடுப்புல வச்சிக்கடி

கோவப்பழ ஓன் உதட்ட
என் உதட்டில் தச்சிக்கடி
உச்சந்தல கொதிக்கிதடி
என் உள்ளங்கையும் நமிக்குதடி

ஒன்னுடைய தோளில நான்
ஊஞ்சல் கட்டி ஆடிகிறேன்
ஒன்னுடைய வேட்டிய நான்
சாமத்துல மாட்டிகிறேன்

ஓன் மீச முடிய பின்னி
மோதிரமா போட்டுக்கிறேன்
மனசுதான் பதைக்குதடா
ஏன் மாராப்பு வழுக்குதடா

நெசமா நீ கூட வந்தா
அந்த நெலாவுக்கே கூட்டிபோவேன்

பக்கத்துல நீயிருந்தா
நா எப்போதுமே சிரிச்சிருப்பேன்

அடி ஒம்மேலதான்
வெயில் பட்டா துடிச்சி நிப்பேன்
சூரியன ஒலிச்சி வெப்பேன்

ஒன்ன ஒத்த நொடி வெலகாம
அனைச்சி நிப்பேன்
சேலையில முடிஞ்சி வெப்பேன்

ஆரவள்ளி ஏய் சூரவள்ளி

ஹே ஹே

அடிவெள்ளிரிக்கா வெதபோல
வௌக்கேத்தும் பல்லழகி
முந்திரிக்கா காச்சதுபோல
முழுசானா முன்னழகி

கத்தரிக்காய் காம்புபோல
கதகேட்கும் காதழகி
முத்தசோறு ஆக்கிதரட்டா
வைற முக்குத்தி நான் வாங்கிதறட்டா

பாசங்கு பன்னாதடா
பல்லு பூறா கொட்டி பூடும்
கையகிய வெக்காதடா
கட்டுசோறு கெட்டு பூடும்

அண்ணகிட்ட சொல்லிபுட்டா
ஓன் வால வெட்டிபுடும்
எங்க அப்பன் கோவகாரன்டா
ஒன்ன உண்டு இல்லன்னு ஆக்கபோரான்டா

வில்லுவண்டி நூறுகட்டி
ஒனக்கு வேண்டிய சீர் ஏத்தி வாறேன்

காஞ்சி பட்டு கூரகட்டி
ஓன் கைய கோத்து நானும் வாறேன்

அடி வேணாம் புள்ள கோவமெல்லாம்
விட்டு  புடிடி அள்ளி என்ன நெட்டிமுறிடி

நான் சேத்து வச்ச ஆசையெல்லாம்
உனக்கு தாறேன்
ஓங்கூட தொனைக்கி வாறேன்

ஆரவள்ளி சூரவள்ளி
ஆட்டிபடைக்கும் அம்ச வள்ளி
என்ன தொவச்சி எடுக்க வந்த கள்ளி

கொறலிவித்த பேச்சிக்காரா
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா
ஏ கொடுக்கா பல்லு மூக்குக்காரா

ஒன்ன கண்டா துடிக்கிறேன்டி
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி

என்ன சப்புகொட்டி சொக்காதடா
என்ன தாலிகட்டி தூக்கிகோடா

ஹே தன்னா னானே
னானா தன்னா னானே
ஹே தன்னா னானே னானா
தானே னானே தானா னா ஹே