Parisuththam Pera
Sujatha
4:01பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே சோதனைகளை வென்றவர் எவரும் துன்பம் தொல்லைதனை சகித்தவரும் ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே