Verenna (Ivan Yaro)
P. Unnikrishnan, Harini
5:25வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதை தான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு பூவே உன் கதவுகள் எல்லாம் பூட்டிதான் கிடக்கு பத்து விரல் சாவி எல்லாம் என் வசம் இருக்கு வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா? நீயே வழங்கிட மனமில்லையா? வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா? உரிமை எனக்கில்லையா? காகித பூமி நான் இல்லையா? தருகிற மேகம் நீ இல்லையா? பூமியின் மர்மங்கள் நனைத்திடையா? பூக்கள் மலர்திடையா? அழகின் மொத்தம் நான் அணைக்க ஆயிரம் கைகள் வேண்டுமடி தலைவி சூரிய தாகம் தீரும் வழி சுந்தர பானம் அள்ளிக் குடி தலைவா கூடலிலே பெண்ணின் கண்கள் மூடியே கிடக்கு கோடுகளை தாண்டும் செய்கை சம்மதம் அதற்கு பூ-பூ நான்கு முலம் போதுமடி பெண்களுக்கு வா-வா வாசலெல்லாம் வழி திறக்கும் ஆண்களுக்கு புண்ணியம் செய்தனமே மனமே ஒரு பூங்குழலே கண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்... இங்கே வந்து தம்பதியாக கண் விழிக்க நம் செம்பியன் மேல் பர்ம பாதம் பதித்திடவே காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை கடலில் துளி ஒன்று இருக்கும் வரை காலத்தின் கடை நொடி கழியும் வரை கண்ணா கலந்திருப்போம் சுற்றும் உலகம் நிற்கும் வரை சூரிய குமுழி உடையும் வரை வானம் வயதாகி உதிரும் வரை கண்ணே இணைந்திருப்போம் உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து உயிரே என்னை வழி நடத்து தலைவா எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து அதில் அதில் எனை கொண்டு நிலைநிறுத்து தலைவி கட்டில் மீது விளக்கின் கண்கள் மூடுதல் எதற்கு? இல்வழக்கில் சாட்சி இல்லை என்று செய்வதற்கு? வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதை தான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு