Thavani Pootta

Thavani Pootta

Vijay Yesudas

Альбом: Sandakozhi
Длительность: 4:24
Год: 2005
Скачать MP3

Текст песни

தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எரிய கணக்கு புரியல

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல

ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த கோழியா

பம்பரத்த போல நானும்
ஆடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணி நீ கொடுக்க
ஆகி போகும் தீர்த்தமா

மகா மகா குளமே
என் மனசு கேத்த முகமே
நவா பழ நிறமே
என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல
எனக்கு எதும் தோணல

கிழக்கு மேல விளக்கு போல
இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல
உடைச்சு தின்னாலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி நிற்கும்
பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர
பாசத்தோட காட்டு நீ

தேக்கு மர ஜன்னல்
நீ தேவ லோக மின்னல்
ஈச்ச மர தொட்டில்
நீ இழந்த பழ கட்டில்

அருந்த வாலு
குறும்பு தேழு
ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்க குலுங்க
சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க
நெருப்பு வச்சானே

தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல