Aathadi Manasudhan
Yuvan Shankar Raja
5:10இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்து துடிக்கிறதே காயம் யாவையும் தேற்றி கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இது நகித்திடும் நெருப்பா இல்லை குளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும் போதும் இது துடித்திடுமே ஏங்கும் போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வி இல்லா விடையா இதை அறிந்தோர் யாருமில்லை இதயம் எல்லை என்றால் என்ன நடக்கும் கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும் இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ