Aathangara Marame
A.R. Rahman, Sujatha Mohan, Vairamuthu, And Mano
4:53ம்-ம்-ம்-ம் ம்-ம்-ம்-ம் அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடிமனச அருவாமனையில் நறுக்கிறியே அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே அடிமனச அருவாமனையில் நறுக்கிறியே அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்த குமரி நான் ஆமா அயிரமீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடல காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிறு திரிக்கிற சுகம் சுகமா கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே (ஆ) அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே அடிமனச அருவாமனையில் நறுக்கிறியே ம்-ம்-ம்-ம் ம்-ம்-ம்-ம் சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ ஒஹோ (ஒஹோ) சந்திரன கள்ளுக்குள்ள ஊரவெச்ச பெண் இவளோ (ஓஹோ-ஒஹோ-ஒ) ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சு மை இடவோ ஆஹான் (ஒஹோ) மின்மினிய கன்னத்தில ஒட்டவைச்சு கைதட்டவோ (ஒஹோ-ஒஹோ) துருவி என்ன தொலைச்சுபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா தலைக்கு வைச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா தூங்கும் தூக்கம் கனவா கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே (ஆ) அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடிமனச அருவாமனையில் நறுக்கிறியே (சோள கொல்ல பொம்மையோட) (சோடி சேந்து ஆடும் புள்ள) (புளியம் பூவே) (சோள கொல்ல பொம்மையோட) (சோடி சேந்து ஆடும் புள்ள) (மகிழம் பூவே) தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வைக்க லட்சியமா ஆஹான் (ஒஹோ) காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா (ஒஹோ-ஹோ-ஒ) பொண்ணு சொன்னா தலைகீழ உக்கி போட முடியுமா ஆஹான் (ஒஹோ) நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா நீராக நான் இருந்தால் உன் நெத்தியில நான் இறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன் கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே (ஆ) அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடிமனச அருவாமனையில் நறுக்கிறியே அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்த குமரி நான் ஆமா அயிரமீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடல காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிறு திரிக்கிற சுகம் சுகமா ம்-ம்-ம்-ம் ம்-ம்-ம்-ம்