Nee Yeppo Pulla

Nee Yeppo Pulla

D. Imman, Alphons Joseph, & Yugabharathi

Длительность: 4:01
Год: 2012
Скачать MP3

Текст песни

நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாயை மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு
நீ எப்ப? நீ எப்ப?
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்ப? நீ எப்ப?
நீ எப்ப புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நிலா வானோட வெத்தலயும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ எப்ப? நீ எப்ப?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ வெறும் வாயை மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு
நீ எப்ப? நீ எப்ப?
நீ எப்போ புள்ள சொல்ல போற?