Sadhi Senji
Devakottai Abirami
5:05ஒத்த நொடி பார்வையிலே கட்டி என்னை இழுத்தவனே என்னோட ஆசை மாமனே உன்னை கட்டிக்கொள்ள ஆசை வைச்சேனே கன்னங்குழி ஓரத்துல காதல் முத்தம் நீயும் தர நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே நான் உனக்காக பூத்திருக்கிறேனே உடலில் இருக்கும் உசுரா நீ எனக்குள் வந்து சேர்ந்த கொட்டி கிடைக்கும் ஆசை அதை பாட்டா எடுத்து படிச்சேன் ராமன் சீதைபோல ராசா என்னை நீயும் ஆண்டிடனும் ஒத்த நொடி பார்வையிலே கட்டி என்னை இழுத்தவனே என்னோட ஆசை மாமனே உன்னை கட்டிக்கொள்ள ஆசை வைச்சேனே வேலை செஞ்சு வேர்வை சிந்தி வீட்டுக்குள்ள நீயும் வந்தா எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டி முந்தானையில் தலை துவட்ட அத்தை பெத்த ராசா நீ அந்த வரம் கொடுத்திடய்யா ஆயுசுக்கும் உன் நிழலா உன் கூடவே வருவேன் அய்யா மொட்டை மாடி நிலவ நாம்ம சேர்ந்து ரசிக்க வேணும் என் எதிர நீயும் போக உன்னை கட்டி அணைக்க வேணும் இந்த பருவப்புள்ளை ஆசை ஏன்டா உனக்கு புரியவில்லை ஒத்த நொடி பார்வையிலே கட்டி என்னை இழுத்தவனே என்னோட ஆசை மாமனே உன்னை கட்டிக்கொள்ள ஆசை வைச்சேனே பொட்டப்புள்ள இவ மனசு பொட்டக்காட்டில் திரியுதடா பொட்டு வைச்சு பூ முடிக்க உன் வரவ பாக்குதடா ஆயிரம்பேர் இருந்தாலும் உன்னைப்போல யாரும் இல்லை கண்ணை மூடி படுத்தாலும் ராப்பகலா தூக்கம் இல்லை தொட்டு நானும் குளிக்க அட கிணத்து தண்ணி கிடைக்கு இந்த மஞ்சள் தேய்ச்ச முகம்தான் அந்த நாள பார்த்து இருக்கு நீ காட்டும் தாலி கொடிய இடுப்பில் முடிஞ்சு காத்திருக்கேன் ஒத்த நொடி பார்வையிலே கட்டி என்னை இழுத்தவனே என்னோட ஆசை மாமனே உன்னை கட்டிக்கொள்ள ஆசை வைச்சேனே கன்னங்குழி ஓரத்துல காதல் முத்தம் நீயும் தர நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே நான் உனக்காக பூத்திருக்கிறேனே உடலில் இருக்கும் உசுரா நீ எனக்குள் வந்து சேர்ந்த கொட்டி கிடைக்கும் ஆசை அதை பாட்டா எடுத்து படிச்சேன் ராமன் சீதைபோல ராசா என்னை நீயும் ஆண்டிடனும் தந்த நன நாநன்னன தந்த நன நாநன்னன தந்தான நனனனன நா தந்தான நனனனன தந்த நன நாநன்னன தந்த நன நாநன்னன தந்தான நனனனன நா தந்தான நனனனன