Kathaigalai Pesum
G. V. Prakash
5:25G. V. Prakash, Na. Muthukumar, Naresh Iyer, Shreya Ghoshal, And Haricharan
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் நெருப்போடு வெந்தே மண் ஆவேன் நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்திச் சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமைக் காடு நீ வந்தாய் பூக்களோடு என்னைத் தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் (ஆஆ) அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த (ஆஆ) வலிகள் தீரும் உன் காதல் ஒன்றைத் தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஹம்ம்...ஹம்ம்...ஹம்ம்...ஹம்ம் (ஆஆ...ஆஆ)