Pachai Nirame

Pachai Nirame

Hariharan, Clinton Cerejo

Альбом: Alaipayuthey
Длительность: 5:59
Год: 2000
Скачать MP3

Текст песни

சகியே ஸ்னேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்

எல்லா சிவப்பும் உந்தன் கோபம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே