Unnaale Unnaale
Karthik
4:43வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன் பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன் அட அடடடடா ஓ அட அடடடடா ஓ நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா அட அடடடடா ஓ அட அடடடடா ஓ ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா மறுமுறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா அட அடடடடா ஓ அட அடடடடா ஓ ஹே அஹ்ஹ் ஹே அஹ்ஹ் உன் பூதக் கண்ணாடி தேவை இல்லை என் காதல் நீ பார்க்க கண் போதுமே முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே கோவம் ஏக்கம் காமம் வெக்கம் ஏதோ ஒன்றில் பாரடி ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா மறுமுறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா அட அடடடடா ஓ அட அடடடடா ஓ