Nenjam Orumurai
Mahalakshmi Iyer & Srinivas
4:46ஒஒஒஒஒ ஓஓஓ ஓஓஓஓ ம்ம்ம்ம் ம்ம்ம் ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெளிந்து விடும் காதலில்தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும் உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே நதியில் தெரியும் நிலவின் உருவம் நதிக்கு சொந்தமில்லை நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும் வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல்தானே ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ம்ம்ம்ம் ம்ம்ம் நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய் தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய் மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை உன்னோடு நான் வாழ போராடுவேன் நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன் ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெளிந்து விடும் காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும் உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே