Minsaaram En Meedhu

Minsaaram En Meedhu

Harish Ragavendar, Jack Smelly & Sadhana Sargam

Альбом: Run
Длительность: 4:56
Год: 2002
Скачать MP3

Текст песни

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை

காதல் ஸியே ஓ காதல் ஸியே
ஓ காதல் ஸியே காதல் ஸியே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்பு தரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும்
என்று கண்டேன் அன்பே
நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண் என்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

காதல் ஸியே ஓ காதல் ஸியே
ஓ காதல் ஸியே காதல் ஸியே

மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளை அடித்தது நீயடி
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்

காதல் ஸியே ஓ காதல் ஸியே
ஓ காதல் ஸியே காதல் ஸியே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை

காதல் ஸியே ஓ காதல் ஸியே
ஓ காதல் ஸியே காதல் ஸியே