Notice: file_put_contents(): Write of 676 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Ilaiyaraaja - Katha Kelu | Скачать MP3 бесплатно
Katha Kelu

Katha Kelu

Ilaiyaraaja

Длительность: 3:51
Год: 1986
Скачать MP3

Текст песни

அடி கதை கேளு கதை கேளு
கருவாயன் கதை கேளு

அடி கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி
கரிமேட்டுக் கருவாயன் கதை போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி

கட்டுக் கதை இல்லை
ஒட்டுக் கதை இல்லை
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
வைகை நதிக்கரை ஓரத்துல
அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு

கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி

உண்மையில அவன் கள்ளனில்லை யாய
உண்மையில அவன் கள்ளனில்லை
மருத ஜில்லாவுக்கே அவன் செல்ல புள்ள
சொந்தம் ஒரு ஆள் இல்லை
பந்தம் அதுதான் இல்லை
மலையும் மரமும் தவிர யாரும் இல்லை

தங்கச்சிய பண்னை கற்பழிச்சான்
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்
இன்னும் பழி வாங்காது
கண்ணில் இமை காயாது
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்
சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி
சனங்கெல்லாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி
அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் போலீஸ்

கதை கேளு கதை கேளு
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி

தென்னை மரத்துல படுத்திருப்பான்
ஆனா பூமியில கண்ண வச்சிருப்பான்
கவட்ட வில்லும் உண்டு
கையில் ஒரு வில்லுண்டு
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்

கன்னி கழியாத காளியம்மா
இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா

சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்
இன்னும் சொல்லப் போனா
இளமை வீணா போனா
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா

கதை கேளு கதை கேளு
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி

நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும்
அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும்
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்
கருவில் இருக்கும் பிள்ளை கையெடுக்கும்

பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்
மானம் பிரதானம்தான்
நானும் கரிகாலன்தான்
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்

தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன்தான் வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது வைகை நதி

கதை கேளு கதை கேளு
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி

கட்டுக் கதை இல்லை
ஒட்டுக் கதை இல்லை
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
அந்த வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி ஏ