Veesum Kaatrukku

Veesum Kaatrukku

Karthik Raja, Palani Bharathi, P. Unnikrishnan, And Harini

Длительность: 4:59
Год: 1997
Скачать MP3

Текст песни

வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பிப் பார்க்கிறேன்

வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா(ஆஆஆ )

ஆஆஆ ஆஆஆ

என்னையே திறந்தவள்(யார் அவள் )
யார் அவளோ(யார் அவள் )
உயிரிலே நுழைந்தவள்(யார் அவள் )
யார் அவளோ(யார் அவள் )

வழியை மறித்தாள்(யார் அவள் )
மலரைக் கொடுத்தாள்(யார் அவள் )
மொழியைப் பறித்தாள்(யார் அவள் )
மௌனம் கொடுத்தாள்(யார் அவள் )

மேகமே மேகமே அருகினில் வா
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா

வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பிப் பார்க்கிறேன்

வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்(யார் அவள் )
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்(யார் அவள் )
விழிகள் முழுதும் நிழலா இருளா(யார் அவள் )
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா(யார் அவள் )

சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன் காதலிலே

லேலேலேலேலோ லேலேலேலேலோ

மேகம் போலே
என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு
நீதான் என்னவளே

மேகமேக மேகக்கூட்டம்
நெஞ்சில் கூடுதே
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி
மின்னல் ஓடுதே

வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா