Thennaadu (From "Bison Kaalamaadan")

Thennaadu (From "Bison Kaalamaadan")

Nivas K Prasanna, Sathyan Mahalingam, & Mari Selvaraj

Длительность: 5:02
Год: 2025
Скачать MP3

Текст песни

தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம், உழவாடும் கூட்டம்
ஓ, நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம், விதபோடும் கூட்டம்
பாடும் கூட்டம், பயிராடும் கூட்டம்

பரணி ஆறு, பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ, ஏறப்பூட்டி மாரத்தட்டி கொலவ போடுவோம்
ஏய், தோள சிலுப்பி புழுதி கிளப்ப ஆட்டம் ஆடுவோம்

எங்க பாட்டன், பூட்டன் பட்ட பாட்ட கதையா பேசுனோம்
இங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகையா மாறுனோம்
ஓ, பகையா மாறுனோம்

சதியாடும் ஊருக்குள்ள மதிதேடும் கேள்விக்குள்ள
பதிலாக வந்த சாமி, துணையாக நின்ன சாமி
கதிராடும் சோலக்குள்ள வெயிலாடும் வேலிக்குள்ள
நதியாக வந்த சாமி, பொதியாக பூத்த சாமி

போற வழிப்பாத வீசும், உன்னுடைய காட்டு வாசம்
கம்பெடுத்து பேசும் காத்தில் கொம்பெடுத்து மோதும் சாமி
வாடா காள மாடா நீதா

விதி கூத்தாடும் கூட்டுக்குள்ள காலம் எம்மானே
காலம் எம்மானே, கனவும் எம்மானே, காதல் எம்மானே
காதல் எம்மானே, கண்ணீர் எம்மானே

ஏலே-லேலேலோ, ஏலே-லேலேலோ
ஏலே-லேலேலோ-ஓ

தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம், உழவாடும் கூட்டம்
ஓ, நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம், பயிராடும் கூட்டம்

பரணி ஆறு, பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ, ஏறப்பூட்டி மாரத்தட்டி கொலவ போடுவோம்
ஏய், தோள சிலுப்பி புழுதி கிளப்ப ஆட்டம் ஆடுவோம்

எங்க பாட்டன், பூட்டன் பட்ட பாட்ட கதையா பேசுனோம்
இங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகையா மாறுனோம்
ஓ, பகையா மாறுனோம்