Vanathu Nilaveduthu

Vanathu Nilaveduthu

P. Unnikrishnan, Swarnalatha, Kalai Kumar, And Deva

Длительность: 4:16
Год: 1998
Скачать MP3

Текст песни

ஏஏ ஆஆ ஆஆ ஆஆ

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

அழகு பூங்கொடியே
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா

ஆஆ ஆஆ ஆஆ

மன்மதன் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன

சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு
சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு

கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

தனன்னனா தனன்னனா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு

இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு

என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்

அழகு பூங்கொடியே
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா