Siragugal
Javed Ali
5:22ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள காட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழம்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஒ அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளு தைச்ச ஆடு போல நெஞ்சு குழி நோக முட்டையிட்ட காடாய் இங்கே காட்டை விட்டு போக கிடை ஆட்டு கோமியம் கூட ஒரு ஆறு ஆசை வரும் கிறுக்கேற்றும் ஆம்பள சொல்லும் மறுநாளே மாறிவிடும் நான் பொம்பள கிறுக்குல வல்ல என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல நீ வெறும் வாயா மெல்லாத வெளையாட்டில ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே ஆண்டிபட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம் ஆக மொத்தம் உன்ன கண்டு ஆடி போச்சு நெஞ்சம் பித்தம் கொஞ்சம் கூடி போனா இப்படித்தான் கெஞ்சும் சத்தம் போடும் நெஞ்சு கூட்ட சாத்தி வையி கொஞ்சம் கொடி ஓடும் சக்கர வள்ளி தெரியாம கிழங்கு வைக்கும் அது போல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும் நீ பட்டுனு முன்ன வந்து நில்லு என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு அட நாவுக்கு தூரம் இல்ல பள்ளு நா முடி போட ரெடி தாண்டி முடிவ சொல்லு ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள காட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழம்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி