Katrukkulle

Katrukkulle

Pa. Vijay

Длительность: 4:23
Год: 2009
Скачать MP3

Текст песни

காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான்

மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல்

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே

இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
எங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
எங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீளுதே
அதில் உன்னை ஏந்துதே

கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீளுதே
அதில் உன்னை ஏந்துதே

தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே