Kadavule

Kadavule

Palaashsen

Альбом: Kacheri Aarambam
Длительность: 5:03
Год: 2010
Скачать MP3

Текст песни

மும்முமம மும்முமமா மும்முமம மும்முமமா
மும்முமம மும்முமமா மும்முமம மும்முமமா

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே

அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்

நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய்தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே

அஹ்ஹ்ஹ ரிரிரு திர தீர நான
ரிரிரு திர தீர நான அஹ்ஹ

கண்ணை பார்த்ததும் வேகமாய்
மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே
தேகம் பறக்குது விண்ணிலே

இந்த புது உயிரே நீ தந்ததாய்
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே
ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே

ஓஹோ அஹ்ஹ்ஹ ஆஹ்ஹ்

ஓஹோ மண்ணை முதல் முறை பார்த்திட
தாயின் கருவறை சொன்னது
என்னை முதல் முறை பார்த்திட
உந்தன் கரு விழி சொன்னது

மலை உயரத்திலே நதி தோன்றுமே
அது சேரும் இடம் கடல் ஆகுமே
இது உயிரும் உயிரும் பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது எந்த மொழி

என் உயிரை உன் பாதத்தில்
காணிக்கை ஆக்குகிறேன்

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே

அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்

நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய்தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா(அஹ்ஹ் )