Nee Kavithaigala
Dhibu Ninan Thomas
4:37ஆஆ....ஆஆஆ....ஆஆ ஆஆ...ஆஆ...ஆஆஆ செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே உயிர் வேதனை தரும் வார்த்தையை உறவே நீ பேசுவதோ குயில் வீட்டையே குடை சாய்த்திட புயல் காற்று வீசுவதோ விதியின் ஆட்டம் ஓயாதே எதுவும் விளையாட்டே வாடாதே செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே அன்னை மடி மீது தூங்கையிலே தொல்லைகளும் ஏதடா ஆ தந்தை நம்மை தாங்கும் வேளையிலே கைகளிலே வானடா தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே அழுக்கில்லாமலே இருந்தோமடா நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல் பல துண்டாயின்று உடைந்தோமடா வயதாகும் போது நாமே வழி மாறி போகிறோமே செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே மொட்டு விடும் பூவை காட்டுவது எப்பொழுதும் வாசமே உள்ளவரை வாழ தேவை எது உண்மையிலே பாசமே எதை சொன்னாலுமே தவறாகவே பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா உறவில்லாமலே ஒரு ஜீவனும் உயிர் வாழாதென உணர்வோமடா வயலோடு வாழ நாமே வரப்பாக மாறுவோமே செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே