Thuli Thuli

Thuli Thuli

Yuvan Shankar Raja

Длительность: 4:44
Год: 2010
Скачать MP3

Текст песни

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ

நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்

கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்

பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்

காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்

மௌனமாக
உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே