Selaiyile Veedu

Selaiyile Veedu

S. A. Rajkumar, Palani Bharathi, P. Unnikrishnan, And K. S. Chithra

Длительность: 4:30
Год: 1998
Скачать MP3

Текст песни

ஆஆஆ ஆஆஆ

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா

ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே
விழியை மூடும் போதிலும் விரல்களாலே தேடாதே
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

ஆஆ ஆஆ ஆஆ

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தம் என்று தோணுதே

காலநேரம் என்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
ஹா ஆ ஆசொக்குகின்ற வெட்கம் வந்து
வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க