Poonguyil Ragame

Poonguyil Ragame

S.P. Balasubrahmanyam

Длительность: 3:52
Год: 1991
Скачать MP3

Текст песни

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

ஆஆ ஆ ஆஆ ஆ ஆ

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்

என்றும் ஓயாது ஓயாது
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே
என் சூரியோதயம்

அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சம் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்

சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
லா ல லா லலலலா

இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில்
என் கோயில் தெரிகின்றது

உந்தன் பேர் கூட
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது

ஓடும் கங்கை நதி
இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம்
யாவும் பொய்யாகலாம்

உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி