Kondayil Thazhampoo
S.P. Balasubrahmanyam
4:40சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் அட ஆத்தாளே குளிர் காத்தாலே தேவி பூத்தாளே தேடி வந்தாளே சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் மேகத்ததான் கண்டுவிட்டா மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம் தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம் தேகத்த தான் கண்டுவிட்டா மனசுக்குத்தான் திண்டாட்டமாம் தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே தலைக்கு ஏறும் விரகதாபம் ஹோ ஹோய் வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய் ஹா ஹா ஹா ஹான் சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் சோள இவ மேனி பட்டு சொட்டுசொட்டா தண்ணி பட்டு நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே சுள்ளியத்தான் பத்த வச்சா சூட்டையும் தான் ஏத்திக்கலாம் காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான் மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே ஏ ஏ ஏ ஹே சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் அட ஆத்தாளே குளிர் காத்தாலே தேவி பூத்தாளே ஹே ஹே தேடி வந்தாளே ஹே