Thedum Kann Paarvai

Thedum Kann Paarvai

S. P. Balasubrahmanyam

Длительность: 4:43
Год: 1986
Скачать MP3

Текст песни

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ ஓ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம்
என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம்
நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள்
என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே
உயிர் வாடும்போது ஊடலென்ன
பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன்
என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ
உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே
என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்

இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க