Nee Paarkum (From "Thiruttuppayale 2")

Nee Paarkum (From "Thiruttuppayale 2")

Sathya Prakash

Альбом: Adiyae Azhagae
Длительность: 4:09
Год: 2018
Скачать MP3

Текст песни

நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா

உன்னாலே நானும்
முன் போலே இல்லை
இதயத்தில் தைத்தாய்
இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே

நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா

ஆஆ ஆ ஆ ஆஆ
சுகம் இதம்
இசை மொழி
பனி மழை
குளிர் நிலவாய் வந்தாய்

வெயில் புயல்
அனல் தணல்
இடர் துயர்
தொடர் வலியும் நீ தந்தாய்

நீ எங்கே என் உயிரே
நிழலாக ஓடுகிறாய்
மெதுவாக தேடுகிறேன்
மேகத்தால் மூடுகிறாய்
தடுமாறி போனேன் கொஞ்சமே

நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா

பிடித்ததும் ரசித்ததும்
நினைத்ததும்
கிடைத்ததிங்கே உன்னால்

தனித்ததும் தவித்ததும்
துடித்ததும்
வலித்ததெல்லாம் உன்னால்

அதிகாலை உன் விழியில்
அழகாக பூத்திருப்பேன்
இரவென்றால் உன் அருகே
மெழுகாக காத்திருப்பேன்
தடுமாறி போனேன் கொஞ்சமே

நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா

உன்னாலே நானும்
முன் போலே இல்லை
இதயத்தில் தைத்தாய்
இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே