Poova Thalaiyaa (From "Vaanam Kottattum")

Poova Thalaiyaa (From "Vaanam Kottattum")

Sid Sriram

Длительность: 3:10
Год: 2020
Скачать MP3

Текст песни

யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா
ஆண்டவன நேரில் கண்டா கையேடு கொண்டா

பூவா தலையா போட்டு பாத்தேன்
தல கீழா திருப்பி கேட்டேன்
வெல பேசி வாங்க பாத்தேன் பதிலே இல்லையே

ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு
கவலை இல்லா இதயம் உண்டா கண்ணில் காட்டு

ஒரு நாள் இரவில நான் கொஞ்சம் அழுதேன்
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்
தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன்
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு

கேக்காத கேள்விக்கு எல்லாம்
பதில் தேடி பாக்கயிலேதான்
திறக்காத கதவொன்னுதானா
ஒரு திரை போல விலகிடலாச்சு

வடக்குக்கும் தெக்குக்கும் போக
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு
ஒரு தாயத்த உருட்டி போட்டு
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு

யாருமில்லா காட்டுக்குள்ள
நான்தான் ராஜா...(ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ)

எனது உனதென்று
எதுவும் இங்கே கிடையாது
விதிகள் உடையாமல்
விடைகள் கண்ணில் தெரியாது

அடிமேல் அடி வைத்து
மெதுவா மெதுவா நடை போடு...
முடிவும் ஆரம்பம்
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு...

மீண்டும் தொடங்கு முதல் பாட்டு...
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு
வாடா...
புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு
ஏன்டா...
வெட்டி வீசும் கத்திக்கு
எல்லை கோடு உண்டா கூறு

சரி தவற பிரிச்சு
வரி வரியா படிச்சு
தர்மம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல

கடவுள் நின்னு கொல்லும்
கதைகள் எல்லாம் கனவு
தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல

ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு
நீ இருந்தா இந்த பக்கம் ஓர பார்வை பாரு
வாடா...
புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு
வாடா...
ஏன்டா...
வெட்டி வீசும் கத்திக்கு
எல்லை கோடு உண்டா கூறு
வாடா...