Notice: file_put_contents(): Write of 611 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Sreenivas & Sujatha - Ennuyire | Скачать MP3 бесплатно
Ennuyire

Ennuyire

Sreenivas & Sujatha

Альбом: Uyire
Длительность: 7:23
Год: 1998
Скачать MP3

Текст песни

ஹாஆ...ஆஆ...ஆஆ
ஹாஆ....ஆஆ....ஆஆ

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே
என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே
என் ஓருயிரே

வந்து சேர்ந்து விடு
என்னை சேர விடு
இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளைவிடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்

மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ

என்னுயிரே என்னுயிரே
உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்

இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்
என் நருமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுய நிலை என்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே
என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ
இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை

இது இல்லை என்றால் அது தெய்வீக காதல் இல்லை
இந்த காதலில் மரணம்  ஏழு நிலை
இது இல்லை என்றால் அது  காதல் இல்லை
உடல் மறைக்கின்ற காதல் மரிப்பதில்லை  மரிப்பதில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே என் ஆருயிரே என் ஓருயிரே