Kannoram (Feat. Srinisha Jayaseelan)
Stephen Zechariah
5:22எனை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காது நெஞ்சம் என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும் அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும் அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும் உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே உன் விழி ரெண்டும் கூச புது வெட்க்கங்கள் பேச எனை பிரியாமல் அணைதாளே உயிர் நீளுமே வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே உன்னோடு தான் என் மனம் வாழுதே அது சொல்லாமலே உன் வசமானதே உன்னோடு தான் என் நிழல் போகுதே என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே தாலாட்டும் பார்வை நீ வீச வா உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா நான் கேட்கும் பாடல் நீ ஆக வா என் உயிரெல்லாம் இசையாக சேர வா பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுவேன் உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன் உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன் மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன் வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே தீராமலே விழி கதை பேச வா முகம் பாராமலே உன் மனம் சொல்லவா கண்ணாலனே என் மிதி மீற வா உன் இதழின் வரிகள் வழியே எனை தேட வா நீயாக மாறும் வரம் வாங்கவா தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா மருதாணி போல் உன் கை சேரவா உன் சிவப்பான வேட்க்கங்கள் பூசவா அன்பே கடிகார எண்ணாக நீ ஆகவே தினமும் உனை சுற்றும் முள்ளாக நானாகிறேன் நீயும் கடலாக வந்தால் நான் அலையாகிறேன் உன்னை பிரியாமல் உனக்குள்ளே அலைப்பாய்கிறேன் எனை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காது நெஞ்சம் என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும் அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும் அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும் உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே உன் விழி ரெண்டும் கூச என் கூச்சங்கள் பேச எனை பிரியாமல் அணைதாளே உயிர் நீளுமே வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் ஜீவன் வாழுதே வா என் உயிரே, வா என் உறவே உன்னாலே என் காதல் வாழுதே