Yeppadi Irruntha

Yeppadi Irruntha

Tippu, Gopika Pornima

Длительность: 4:26
Год: 2008
Скачать MP3

Текст песни

எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா

உனது சிரிப்பின் ஒலியில் எனது
இளமை தவிக்கிறதே
அலையும் உனது விழியை பார்த்தால்
பயமாய் இருக்கிறதே

அரிது அரிது இளமை அரிது
விலகி போனால் நியாயமா

மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது

எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா

ஏய் சொட்டு சொட்டுத் தேனா
நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

திட்டு கிட்டு வேணாம்
ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீணா

அழகு என்பதே பருகத் தானடி
எனது ஆசைகள் தப்பா

நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா

இரவோ பகலோ கனவோ நிஜமோ
எதிலும் நீயே தானடி

மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது

ஏய் கிட்ட வந்து நின்னா
அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

கொக்கு வந்து போனா
அட நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே

துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே

நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே

மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது