Ayyo Adi Aathe (From "Kodiveeran")

Ayyo Adi Aathe (From "Kodiveeran")

Vandhana Srinivasan

Длительность: 4:27
Год: 2017
Скачать MP3

Текст песни

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீதான்
என் மனச என் மனச

எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீதான்
என் வயச என் வயச

எட்டாம் நம்பர் போலதான்
சுத்தி வந்து வளைச்சாலே

கட்டம் கட்டி என் நெனப்ப
பத்த வச்சி போரானே

அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்
என் உலகம்தான்

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீதான்
என் மனச என் மனச

அவ சிகப்பு செம்பருத்தி போல
அவ சிரிப்பு செங்கரும்பு போல
அவ பேச்சு செந்தமிழப் போல
இனிக்கும் இனிக்கும்

அவன் மொறப்பு சண்டியர போல
அவன் வனப்பு மம்முதன போல
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்
இழுக்கும் இழுக்கும்

குண்டூசி பார்வைக்காரி
குண்டு வைக்கும் பேச்சுக்காரி
குத்துகல்லா நிக்க வைக்கும்
கும்மிருட்டு மச்சக்காரி

அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்
என் உலகம்தான்

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீதான்
என் மனச என் மனச

ஹே ஹே ஹேய் ஹே ஹே ம்ம்ம் ம்ம்
அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்
அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்
நான்தான் நான்தான்

அவ கண்ணில் தூசி ஒன்னு விழுந்தா
அதனால அவ கண்ணு கசிஞ்சா
காத்த நானும் கட்டி வச்சு மிதிப்பேன்
நெசம் தான் நெசம் தான்

எனகின்னு பொறந்தான் பாரு
எனக்குள்ள புகுந்தான் பாரு
நெனபெல்லாம் கலந்தான் பாரு
அவன்தான் என் உசுருக்கு வேரு

அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்(லலலல )
என் உசுரதான்
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்(லலலல )
என் உலகம்தான்

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீதான்
என் மனச என் மனச

எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீதான்
என் வயச என் வயச